அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜார்ஜ்வெஸ்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன
அப்போது அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த மினிவேன் ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. அதை தொடர்ந்து மினிவேனுக்கு பின்னால் வந்த மற்றொரு கார் மினிவேன் மீது மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து நடந்த மோதலில் 3 வாகனங்களில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த தொடர் விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.