News

உக்ரைன் உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்- 10 பேர் பலி, 18 பேர் காயம்.

 

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷிய படைகள் டிரோன் தாக்குதலை நடத்தியது.

தலைநகர் கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் இடிந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். அதேபோல் ரிஷிசிவ் நகரில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயம் அடைந்தனர்.

சபோரிஜுயாவில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கிடையே தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட 21 டிரோன்களில் 16-யை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்தது.

ரஷியா சென்றிருந்த சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top