News

பிரித்தானியாவில் 39 சட்டவிரோத குடியேறிகள் உயிரிழந்த சம்பவம்: ருமேனியாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி

பிரித்தானியாவில் உயிரிழந்த 39 வியட்நாம் குடியேறிகள் கொலை வழக்கில் 50 வயதான கடத்தல் குழு தலைவர் மரியஸ் மிஹாய் டிராகிசி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் எசெக்ஸில்  கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 39 வியட்நாம் குடியேறிகள் கிரேஸில் உள்ள தொழிற்பேட்டை ஒன்றில் லொறிக்கு பின்புறம் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வியட்நாமை சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என 39 பேர் சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளின் போது உயிரிழந்து இருந்தனர்.

அப்போது வெளியாகி இருந்த தகவலின் அடிப்படையில், 38.5 செல்சியஸ் தாங்க முடியாத வெப்பத்தில் நெருக்கமான இடத்தில் காற்று பற்றாக்குறை ஏற்பட்டு, ஆபத்து எச்சரிக்கையை எழுப்ப எடுத்த தீவிரமான முயற்சிக்கு பிறகு அனைவரும் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2021ம் 4 பேர் குற்றம் சாட்டப்பட்ட கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து 39 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய மக்கள் கடத்தல் குழு தலைவர் மரியஸ் மிஹாய் டிராகிசி (Marius Mihai Draghici) கடந்த ஆகஸ்ட் மாதம் ருமேனியாவில் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் 50 வயதான கடத்தல் குழு தலைவர் மரியஸ் மிஹாய் வெள்ளிக்கிழமை ஓல்ட் பெய்லியில் நடந்த விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top