News

மனித கடத்தல் நடவடிக்கைக்காக இரகசியமாக கடத்தப்பட்ட இலங்கையர்கள்! இன்டர்போல் எடுத்த அதிரடி நடவடிக்கை

மனித கடத்தல் நடவடிக்கை மூலம் சியாரோலியோனிற்கு கடத்தப்பட்ட 15 இலங்கையர்களை இன்டர்போல் மீட்டுள்ளது.

இன்டர்போலிற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்டர்போலின் மனிதகடத்தல் ஆள்கடத்தலிற்கு எதிரான பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது உலகநாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மனித கடத்தல் நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை இன்டர்போல் மீட்டுள்ளது.

பிளாஸ்வெக்கா நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என இன்டர்போல் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top