காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்,ஹமாஸ் அமைப்பு தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 413 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஹமாஸ் உறுதிபடுத்தி உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 413 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த விதிமுறைகளை மீறி உள்ளது. கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.