கிரிமியா உள்ளிட்ட 4 உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷ்யா விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில் அதனை செயற்படுத்தும் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆராய்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா உக்ரைன் யுத்தநிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஷ்யாஆக்கிரமித்துள்ள கிரிமியாவை அதன ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து இந்த நகர்வு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் 30 நாள் யுத்த நிறுத்தம் குறித்து தொலைபேசி மூலம் பேச்சுகளில் ஈடுபடுபடவிருந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களிற்கு முன்னர் விமானத்தில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் ட்ரம்ப் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சொத்துக்களை பிரிப்பது குறித்து ஏற்கனவே பேசியுள்ளனர்.
இதன்போது தான் காணி மற்றும் வலுசக்தி திட்டங்கள் குறித்து புட்டினினுடன் சிறப்பாக விவாதிக்கவுள்ளதாக ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.
எனினும்,வெள்ளை மாளிகை இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவில்லை.
கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரித்துள்ள நிலையில் , இராணுவ வழிமுறைகள் மூலம் ரஷ்யா மீண்டும் அதனை கைப்பற்ற முடியுமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனினும், கிரிமியாவை ரஷ்யா அடைவதற்கு பல இராஜதந்திர முயற்சிகள் தேவைப்படும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டார்.
ஆனால் ரஷ்யா அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.