அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) புதிய வரிக் கொள்கை இலங்கையில் சில ஏற்றுமதி பொருட்களில் தாக்கத்தை செலுத்தும் என பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த(Anil Jayantha) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(18.03.2025) அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனால் இலங்கையின் ஆடைகள், ரப்பர், தேங்காய் மற்றும் பிளாஸ்டிக் ஏற்றுமதி பாதிக்கப்படலாம்.
ட்ரம்பின் வர்த்தகக் கொள்கையின் எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஏற்கனவே எடுத்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதர் ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை அமெரிக்காவுடன் நல்ல இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளதுடன் அந்த நாட்டோடு வெற்றிகரமான ஈடுபாட்டையும் கொண்டிருக்கிறோம்.
அத்துடன், இந்த விடயத்தில் அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.