சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒன்பது மாதங்களாக ஆய்வு மேற்கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில் மோர் உள்ளிட்ட நால்வர் பயணித்த விண்கலம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது.
தரையிறங்கும் டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை மீட்க தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் குழு அவர்களை மீட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams)பூமியில் கால் பதிக்கவுள்ள நிகழ்வை நிகழ்ச்சியை நாசா நேரலையாக ஒளிபரப்புகின்றது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(Butch-wilmore) கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்கா அரசு முயற்சி செய்தது.
இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இந்த மீட்பு விண்கலத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர்.
அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, க்ரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர்.
அவர்களுடன் இங்கிருந்த சென்ற விண்வெளி வீரர்களும் பயணிக்கிறார்கள். க்ரு டிராகன் விண்கலம், நேற்று இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்குச் சென்ற டிராகன் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இணைக்கப்பட்டு இருந்தது. அது அமெரிக்க நேரப்படி திங்கள் மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.
அதி வேகத்தில் பயணிக்கும் டிராகன் காப்ஸ்யூல் 21:57 GMTக்கு பூமியில் தரையிறங்கும்.
அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 3.27க்கு அது பூமி திரும்பும் எனத் தெரிகிறது. அதிவேகத்தில் பூமிக்கு வரும் விண்கலம், தரையை நெருங்கும் போது பாதுகாப்புக்காக பெரசூட் விரிவடையும். இதன் மூலம் அவர்களின் வேகம் கணிசமாகக் குறையும்.
அவர்களின் காப்ஸ்யூல் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் கடல் நீரில் விழுவது போல திட்டமிடப்பட்டுள்ளது.
கடல் நீரில் விழுந்த உடனேயே சுனிதா வில்லியம்ஸும் அவரது டீம் உறுப்பினர்களும் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.
அங்கு வைத்துத் தான் அவர்களின் உடலுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும்.
மேலும், விண்வெளி பயணம் குறித்த மதிப்பீடுகளும் செய்யப்படும்.
சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் நிகழ்வாக இது மாறியுள்ளது. நாசா தனது அனைத்து மிஷன்களை போல இதையும் நேரடியாக ஒளிபரப்புகிறது.
அவர்கள் பூமிக்கு திரும்புவதையும் புளோரிடா கடற்கரை கடலில் இறங்குவதையும் நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பார்க்க முடியும்.