நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு முதல் யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. இப் போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீயூவில் கடந்த வார இறுதியில் ரஷ்யா ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது.
இத் தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்ததோடு 10 பேர் காயமடைந்துளளனர் என்றும் கீயூவ் நகர இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.