இலங்கையர் நால்வருக்கு எதிராக பிரித்தானியா அரசாங்கம் விதித்துள்ள தடைகளை தான் வரவேற்பதாக, கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளது சமூக ஊடக பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 2023ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா தடைகளை விதித்ததை தொடர்ந்து பிரித்தானியாவும் தடைகளை விதித்தது.
இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும் என குறிப்பிட்டுள்ளார்.