இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை, அந்த நாடுகளுக்கு விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
ஏப்., 2 முதல், இதற்கான அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
அமெரிக்க வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இது எங்கள் பொருளாதார சுதந்திரப் பிரகடனம். இன்றைய நாள், அமெரிக்க வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும்.
உலக நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் அதே அளவு வரியை நாமும் விதிக்கப் போகிறோம். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்றப் போகிறோம்.
பிரிட்டன் மீது, 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவை பல ஆண்டுகளாக நட்பு, எதிரி நாடுகள் சூறையாடி வந்தன. இனி அது ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பால், பல்வேறு நாடுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என, கூறப்படுகிறது.