ரஷ்யாவில் பரவி வரும் மர்மமான வைரஸ் காரணமாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவிட் தொற்றுக்கு பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய மக்களை குறித்த வைரஸ் தாக்கி வருகிறது.
இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் இரத்தம் கலந்த இருமல் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் அதிக காச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மர்ம வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இதனை மறுத்துள்ள ரஷ்ய அதிகாரிகள் புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாச நோய்த்தொற்றுகள் தான் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மருத்துவர்கள் இந்த மர்ம வைரஸ் தொடர்பாக, இது சுவாசக்குழாய் தொற்று என்றும் அறிகுறிகள் மோசமடைந்தால் அவசர சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.