தற்போதுள்ள அநுர அரசு தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைகளை மூடி மறைத்து ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜேவிபியினருக்கு நடந்த அநீதிகளை விசாரிக்கும் முகமாக பட்டலந்த பிரச்சினைகளை விசாரிக்க அதற்கொரு ஆணைகுழு கொண்டு வந்துள்ளார்கள்.
பட்டலந்த மட்டும் இலங்கையினுடைய பிரச்சினை இல்லை. கிட்டதட்ட 3000 நாட்களையும் கடந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
எந்வொரு சிங்கள கட்சிகளும் தமிழர்களுக்கான அரசியல் உரிமையை தர தயாராக இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.