News

சிங்கப்பூர் பள்ளியில் பயங்கர தீ விபத்து; உடல்கருகி 10-வயது சிறுமி பலி, 20 பேர் படுகாயம்

சிங்கப்பூர் பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி 10 வயது சிறுமி ஒருவர் பலியானார். மேலும் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் மகன் உள்பட 20 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

சிங்கப்பூர் புறநகர் பகுதியில் 3 மாடி கட்டிடத்தில் உள்ள பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதே கட்டிடத்தில் சினிமா தியேட்டர் வளாகமும், ரோபோடிக் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. நேற்று திடீரென இந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ பள்ளிக்கட்டிடம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீராகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கிய 80 பேரை பத்திரமாக மீட்டனர். இதில் 10-வயது சிறுமி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இந்த தீ விபத்தில் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நடிகர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கரின் கைகளிலும், கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் புகையை சுவாசித்ததால் நுரையீரல் தொற்றாலும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் சிக்கிய மேலும் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top