0% buffered00:00Current time00:00
News

பட்டினியில் வாடும் காசா குழந்தைகள்.. உதவிப்பொருட்கள் அனைத்தையும் தடுத்த இஸ்ரேல்.. ஐ.நா. எச்சரிக்கை

 

இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குறைந்தது 60,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏனெனில் காசாவுக்குள் வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வருகிறது.

மார்ச் 2 முதல், எந்த மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் வாகனங்களும் காசாவிற்குள் நுழையவில்லை. 23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. 21 ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையை சீர்குலைத்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top