சூடானில் உள்ள அகதி முகாம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடானின், தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது துணை இராணுவப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அகதிகள் முகாமில் வசித்து வந்த பொதுமக்களில் 114 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.
இந்தத் தாக்குதலால் கிட்டத்தட்ட 2,400 பேர் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததிலிருந்து 24,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது