தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமிழீழ விடுதலை புலிகளை பற்றி முன்வைத்துள்ள கருத்துக்களை கடுமையாக கண்டிப்பதாக அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், விடுதலை புலிகளை பற்றியும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றியும் மிக கீழ்த்தரமாக பேசியுள்ளார்.
அத்துடன், சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரண்டையும் நாங்கள் கட்டாயம் வெற்றி கொள்வோம் என்ற வகையில், நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இளங்குமரனுக்கு சில விடயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். தென்மராட்சி மண் வீரம் செறிந்த மண். தமிழ் பற்றும் இன பற்றும் மிகுந்த மக்களை கொண்ட மண். அது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார்.