News

அமெரிக்க-புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் படுகாயம்

அமெரிக்க- புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அவரது உடல்நிலை குறித்த தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top