News

பிரித்தானியா வரும் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் உரையாற்ற கடும் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வர உள்ள நிலையில், அவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பிரித்தானியா வர, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.

ஆனால், அவர் பிரித்தானியாவுக்கு வந்தாலும், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப், பிரித்தானியாவுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், நேட்டோ கூட்டணிக்கும் உக்ரைனுக்கும் எதிராக நடந்துகொள்கிறார், கருத்துக்களை வெளியிட்டுவருகிறார்.

ஆக, அப்படியிருக்கும் நிலையில் ட்ரம்ப் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது முறையாக இருக்காது என நீங்கள் பரிந்துரைக்கவேண்டும் என்று, பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top