News

சீனாவை ஆபத்தான நாடாக அறிவித்த கனடா

தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து சீனாவை ஆபத்தான நாடாக கனடா (Canada) அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தலையீடு, சைபர் நடவடிக்கைகள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் மூலோபாய அபிலாஷைகளை மேற்கோள் காட்டி, சீனாவை நாட்டின் முதன்மையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் கூட்டாட்சி தேர்தல் பிரசாரம் இறு வாரத்தில் உள்ள நிலையில் , கனடா-சீனா உறவுகள் குறித்த பிரதமர் மார்க் கார்னியின் நேரடி அறிக்கை இதுவாகும்.

மேலும் தொலைக்காட்சி வேட்பாளர் விவாதத்தின் போது, கனடாவுக்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் அச்சுறுத்தல் என்னவென்று வினவியபோது, ​​அது சீனா தான் என்று கார்னி நேரடியாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top