News

காஷ்மீர் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்?

 

ராணுவ வாகனங்கள் எல்லை நோக்கி செல்லும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் ஊடகங்கள்.

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதற்கு பெரும்பாலான உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து நாடுகளின் தூதரக அதிகாரிகளை அழைத்து இந்திய அரசு பிரச்னையின் தாக்கம் குறித்து விளக்கியது. இதில், இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.

இந்த நிலையில், இந்தியா தங்கள் நாட்டின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதிகளில் ராணுவ ஆயுதங்களை குவித்து வருகிறது. இதற்காக ராணுவ வாகனங்களில் பீரங்கி உள்ளிட்ட பெரிய பெரிய ராணுவ ஆயுதங்களை ஏற்றி கிராமங்கள் வழியாக சென்று நாட்டின் எல்லைப் பகுதியான ராவல்பிண்டி, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் குவித்து வருகிறது.

மேலும், ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களை பாகிஸ்தான் ராணுவம் வாகனங்களில் எல்லைகளை நோக்கி கொண்டு செல்வதை அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top