News

தாய்லாந்தில் கடலில் விழுந்த விமானம்: ஐவர் பலி

 

தாய்லாந்தில் (Thailand) விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து நொருங்கியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக்கள் செய்தி ளெியிட்டுள்ளன.

ஹுவா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே இன்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்துடன், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைக்கிங் டிஎச்சி – 6 டுவின் ஓட்டர் விமானம் ஹ_வா ஹின் விமானநிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளாகியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் கடலில் விழுந்த விமானம்: ஐவர் பலி | Five Police Officers Dead Thailand Plane Crash

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலநிலையை அவதானிப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விமானம் புறப்பட்டு ஒரு நிமிடத்தின் பின்னர் கட்டுப்பாட்டை இழந்தது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் புறப்பட்டு ஒருசில நிமிடங்களில் வெடிப்பு போன்ற சத்தம் அதன் இயந்திரத்திலிருந்து வந்ததாகவும் விமானி விமானத்தை விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கரையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் காணப்படுவதுடன் விமானம் இரண்டாக உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விமானத்தில் ஆறு பொலிஸார் பயணித்துள்ள நிலையில் ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top