செவ்வாயன்று கனேடியத் பிரதமர் கார்னியை தொலைபேசியில் அழைத்தபோது, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.
“நேற்று கார்னி எனக்கு தொலைபேசி அழைப்பு செய்தார் – ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று கூறினார்,” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், கனேடிய தலைவர் ஒரு வாரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா நாடாளுமன்ற தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.