News

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்கள் – 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக காசாவில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகாலை முதல் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலில் 125 பேர் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  அல்ஜசீரா அல் மவாசியில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என  தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 20 பேரின் உடல்கள் கான்யூனிஸ் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மவாசியில் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த வீடுகள் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

மத்திய காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஸ்வெய்டா என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் நான்கு பெண்கள் உட்பட ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை டெய்ர் அல் பலாவில் இடம்பெற்ற தாக்குதலில் பெற்றோரும் அவர்களின் பிள்ளையும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top