News

மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு

இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு இன்று(18) மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது இனஅழிப்பு வாரம் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலமாக சென்று காந்திபூங்காவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் அகவணக்கமும் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மட்டக்களப்பு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் இன்று (18) தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னண மே 18 தமிழ் இன அழிப்பின் நினைவேந்தல் வாகரை முகத்துவாரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கட்டித்தில் கட்சியில் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

GalleryGalleryGallery

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top