புலம்பெயர் நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழின அழிப்பு – நக்பா (பலஸ்தீன மக்கள் அழிப்பு நாள்) அகிய பேரழிப்பு நினைவு நாளையொட்டி பேரணி மெல்பேர்ணில் உள்ள மாநில நூலகத்திலிருந்து ஆரம்பமானது.
பேரணியின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்த பேரணி மாநில நூலகத்திலிருந்து தொடங்கி சென் கில்டா கடற்கரையில் நிறைவு பெற்றது. பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.