News

பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு

இலங்கையில் இறுதி போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முந்தைய அரசாங்கங்கள் நியமித்த அனைத்து ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் தொடர்பில் இன்று வரை கேள்வி எழுப்பபடுகிறது.

குறிப்பாக கடந்த 19 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் நினைவுகூறப்பட்ட நிலையில், இறுதி யுத்ததத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலில் கலந்துக்கொண்ட தென்னிலங்கையின் சிங்கள இளம் சட்டத்தரணி “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த கேள்வி தொடர்பான காணொளியானது இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்கான குரல் என சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே நினைவிடத்திற்கு சென்றிருந்த போதே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், முள்ளிவாய்க்கால்  மண்ணை புண்ணிய பூமி என சுட்டிக்காட்டியிருந்தார்

.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top