News

சீனாவில் கனமழை, நிலச்சரிவு; 2 பேர் பலி; மாயமான 19 பேரை தேடும் பணி தீவிரம்

 

சீனாவின் குய்சோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 19 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை மோப்பநாய் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது. மழை பெய்து வருவதால், மீட்பு பணிகள் தடைபட்டுள்ளன. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராணுவ அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் நீண்ட நேரமாக ஈடுபட்டு உள்ளனர். சீனாவில் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top