News

புதின் பைத்தியம்போல் செயல்படுகிறார் – டிரம்ப் கடும் விமர்சனம்

 

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 187வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா நேற்று டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 266 டிரோன்கள், 45 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ரஷிய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நான் நல்ல உறவில் இருந்து வருகிறேன். ஆனால், புதினுக்கு எதே நடந்துவிட்டது. அவர் பைத்தியம்போல் செயல்படுகிறார். எந்தவித தேவையும் இன்று பொதுமக்கள் பலரை புதின் கொல்கிறார். காரணமின்றி உக்ரைன் நகரங்கள் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உக்ரைனையும் அடைய புதின் முயற்சித்தால் அது ரஷியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top