News

தென்னாப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்: 78 பேர் பலி

 

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை, வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழையால் பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கனமழையால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top