ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் சமீப காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று ஆகும். இதனால் உலக வெப்பமயமாதல், பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் சமீப காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக நாட்டின் 2-வது பெரிய நகரமான பார்சிலோனாவில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டி பதிவானது.
இது கடந்த 100 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். எனவே பகல் நேரங்களில் மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.