News

மனதை உருக்கிய இன்றைய செம்மணியின் முக்கிய அடையாளம்!

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதுகுழியில் இருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை மனதை உறுக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த பொம்மையை போல 1995 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 33 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இரண்டாம் கட்டத்தின் 6ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்றும் தொடர்ந்த நிலையில் மேற்படி சில சிறுவர்களினுடையது என சந்தேகிக்கப்படும் நீல நிற புத்தக பை, அதில் உள்ள சில பொருட்கள் மற்றும் விளையாட்டு பொம்மை என்பன பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

சிறிய பிள்ளையுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட நீல நிற புத்தக பையுடன் காணப்பட்ட மனித எச்சம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினமும் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளதாகவும், இதுவரை 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

GalleryGalleryGallery

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top