News

எங்களுக்கே ஆயுதங்கள் இல்லை உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா

 

உக்ரைனுக்கு அனுப்பி வந்த ஆயுதங்களில் குறிப்பிட்ட சிலவற்றை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த, 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. இதையடுத்து, முன்னாள் அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு பல ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களையும், ராணுவ உதவியையும் வழங்கியது.

ஆனால் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்த ஆயுத சப்ளை குறித்து, அரசு நிர்வாகத்தில் சிலர் கருத்து தெரிவிக்க தொடங்கினர்.

மேலும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் ராணுவ ஆதரவு மற்றும் உதவியை பாதுகாப்புத்துறை ஆராய்ந்தது. அப்போது தங்கள் சொந்த ராணுவ தலைமையகமான பென்டகனிலேயே சில குறிப்பிட்ட ஆயுதங்களின் இருப்பு குறைவாக இருப்பதை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து உக்ரைனுக்கு அனுப்பி வந்த சில குறிப்பிட்ட ஆயுதங்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துஉள்ளது.

அண்மையில்தான், உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க இருந்த நேரத்தில், அமெரிக்கா ஆயுத சப்ளையை நிறுத்துவதாகக் கூறியிருப்பது உக்ரைனுக்கு பின்னடைவாகி உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top