News

புடினின் திடீர் முடிவால் உயிரை மாய்த்து கொண்ட ரஷ்ய அமைச்சர்

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சரை பதவி நீக்கம் செய்த சில மணித்தியாலங்களிலேயே, அமைச்சர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புடின், பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் (Roman Starovoit) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைடின் உடல் அவரது காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின், ஸ்டாரோவைட்டை போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், திடீரென போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டரோவொயிட்டை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார்.

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் உயர் குற்றவியல் புலனாய்வு பிரிவு, ஸ்டாரோவாய்ட்டின் உடல் மாஸ்கோ புறநகர்ப் பகுதியான ஓடிண்ட்சோவோவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், அவரின் உடலுக்கு அருகில், முன்னதாக அவருக்கு அதிகாரப்பூர்வ பரிசாக வழங்கப்பட்ட துப்பாக்கி காணப்பட்டதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top