உக்ரைன்(ukraine) தலைநகர் கியேவின் ஹோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் இன்று காலை(10) உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் (SSU)கேணல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று காலை சுமார் 09:00 மணியளவில்,வோரோனிச் தனது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து வெளியேறி கார் தரிப்பிடத்திற்கு சென்றவேளை இனந்தெரியாத நபர் கேணல் இவான் வோரோனிச்சை(Colonel Ivan Voronych) அணுகி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்
துப்பாக்கிச் சூட்டின் விளைவாக,படுகாயமடைந்த வோரோனிச் சம்பவ இடத்திலேயே இறந்தார். தற்போது, புலனாய்வுக் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறது.