News

25 கிலோ எடை கொண்ட செவ்வாய்கிரக விண்கல் ஏலம்

 

பூமியில் இது வரை கண்டெடுக் கப்பட்டதில் மிகப்பெரிய அளவிலான விண்கல் நியூயார்க்கில் உள்ள சோத்பீசில் ஏலத்துக்கு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு இந்த அரிய வகை மற்றும் தூய்மையான விண்கல் நைஜரின் அகடெஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

என்.டபிள்யூ.ஏ. 16788 என அழைக்கப்படும் 24.67 கிலோ எடை (54 பவுண்டு )யும், 15 அங்குல அகலமும் கொண்ட இந்த செவ்வாய்கிரக விண்கல் 2 மில்லியன் டாலர் முதல் 4 மில்லியன் டாலர் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரக மேற்பரப்பில் இந்த விண்கல் சிறு கோள்களுடன் மோதி வெடித்து சிதறி 140 மில்லியன் மைல்கள் கடந்து பூமியில் விழுந்ததாக சோத்பீசின் அறிவியல் இயற்கை வரலாற்றுத்துறை தலைவர் கசாண்டராஹாட்டன் தெரிவித்தார்.

நியூயார்க்கில் நாளை மறுநாள் (16-ந்தேதி ) இந்த விண்கல் ஏலம் நடைபெற இருக்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top