தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய முதியவர்கள் ஜன்னல்கள் அருகே ஒடிவந்து உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளார்கள்.
“நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்,” “நான் என்னை படைத்தவரை சந்திக்கப் போகிறேன் என்று நினைத்தேன்.” . “என் வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. என்னால் மூச்சு விட முடியாமல் போனது ” என குளியலறை ஜன்னலிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட லோரெய்ன் ஃபெரார தெரிவித்துள்ளார்.
50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் மீட்பு பணிகள் கடினமானதாக இருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 70 வயது வயோதிப பெண்ணும், 77 வயது ஆணும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் உட்பட சுமார் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து தீயணைப்பு வீரர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.