News

வெளிநாடொன்றின் இசை நிகழ்ச்சி மேடையில் பாரிய தீ விபத்து!

பெல்ஜியத்தின் (Belgium) உலகப் புகழ்பெற்ற டுமாரோலாண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இசைத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினால் டுமாரோலாண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடை கடுமையாக சேதமடைந்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் நேற்று (16) மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் இந்த அனர்த்தத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டபோது விழாவிற்கு வந்தவர்கள் யாரும் அங்கு இருக்க வில்லை எனவும் ஆனால் சுமார் 1,000 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top