News

தென்கொரியாவில் பெய்துவரும் கனமழை! 17 பேர் பலி

தென்கொரியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

இதனால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தென்கொரியாவில் பெய்துவரும் கனமழை! 17 பேர் பலி | 17 Death South Korea Rains Cause Landslide Floods

 

தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர் இறந்துள்ளனர்.

மழை தொடங்கியதிலிருந்து 11 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மழை காரணமாக 13,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top