ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதால், சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது என ஜெர்மனி நாட்டு புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 அடி ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஒரே பகுதியில், 32 நிமிடங்களுக்குள் 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டன. 6.4, 7.4 மற்றும் 5.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ரஷ்யாவின் பசுபிக் பிராந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.