News

ஈரான் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து!

 

 

ஈரானில் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 670 கி.மீ.,தொலைவில் அபாடன் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலை 1912ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டு மொத்த எரிபொருளில் இங்கு மட்டுமே 25 சதவீதம் உற்பத்தியாகிறது.

இந் நிலையில், இந்த ஆலையில் உள்ள பழுதுபார்க்கும் ஒரு அலகில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆலைக்கு சென்று தீயணைக்கும் பணியில் இறங்கினர்.

இந் நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதாக, அந்நாட்டின் பார்லி. துணை சபாநாயகர் அலி நிக்சத் கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top