News

இந்தோனேசியாவில் தீப்பிடித்த சொகுசு கப்பலில் இருந்து 575 பேர் பத்திரமாக மீட்பு

 

கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 575 என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் இருந்து கே.எம்.பார்சிலோனா-5 என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது. மனாடோ என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த கப்பல் தீப்பிடித்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அதில் இருந்த பயணிகள் உயிருக்குப் பயந்து கடலில் குதித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் கடலோர போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது மீட்பு படையினருக்கு உதவியாக உள்ளூர் மீனவர்களும் களமிறங்கினர். ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்குள் 5 பேர் பலியாகினர். மற்றவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. 280 பேர் கப்பலில் இருந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில் தற்போது மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 575 என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மீட்பு பணி கைவிடப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top