News

தென் கொரியாவில் வெள்ளம், மண்சரிவு: 23 பேர் மரணம்

தென் கொரியாவின், பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை 16 முதல் ஜூலை 20 ஆம் திகதி வரை தொடர்ந்து அடைமழை பெய்தது. இதனால், அந்நாட்டின் முக்கிய மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் காணாமல்போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சான்சியோங் மாகாணத்தில் காணாமல்போன 3 பேர் மற்றும் காபியோங் மாகாணத்தில் காணாமல்போன ஒருவர்  என மொத்தம் 4 பேரின் உடல்கள், தற்போது மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம்,காணாமல்போனதாகக் கருதப்பட்ட 9 பேரில், மீதமுள்ள 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மோப்ப நாய்கள், அதிநவீன இயந்திரங்கள் ஆகியவற்றைப்  பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அந்நாட்டு மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.  வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 21க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில், அதிகப்படியாக தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், தென் கொரியா இராணுவத்தில் இருந்து சுமார் 2,500 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top