கம்சற்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலையானது 600 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளதாகவும் ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகை சூழ்ந்தது. எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு இதே கம்சற்காவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் நீட்சியே இது, மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்று காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.