News

இடிந்து வீழ்ந்த உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம்; 2 பேர் பலி – 5 பேர் மாயம்.

 

சிலியில் உள்ள உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட சில அதிர்வு காரணமாக இந்த சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தின் போது 900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் தொழிலாளர்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும், 100 இற்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top