ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பஸ் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. இதனை பார்த்த ரெயில் டிரைவர் அவசர பிரேக்கை அழுத்தினார். ஆனால் அருகில் இருந்ததால் அந்த பஸ் மீது ரெயில் மோதியது.
தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் பஸ்சுக்குள் இருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த விபத்தில் உடல் நசுங்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த 11 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.