குறித்த செயற்கை சிறுநீரகத்தை அமெரிக்காவையும் (USA) தென்கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீப காலங்களில் உயிர்களைக் கொல்லும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். சிறுநீரக நோய்கள் உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகின்றன.
இதேவேளை, இலங்கையில் (Srilanka) வயதுக்கு வந்த 10 பேரில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தச் செயற்கை சிறுநீரகம் நோயாளிகளின் வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த செயற்கை சிறுநீரகம் உண்மையான சிறுநீரகத்தைப் போலவே 90% செயற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.