உக்ரைன் தொடர்பில்ரஸ்யாவுடன் கடுமையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா தயாராகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி வியாழக்கிழமை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஸ்டீவ்விட்கொவ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கான உடன்பாட்டினை சாத்தியமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சமாதான உடன்பாட்டை சாத்தியமாக்குவதற்காக விட்கொவ் நான்கு தடவை ஏற்கனவே ரஸ்ய ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
எனினும் புட்டின் சமாதான உக்ரைன் குறித்த சமாதான உடன்பாட்டிற்கு வரவேண்டும் இல்லையேல் தடைகளை எதிர்கொள்ளவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி நிபந்தனை விதித்துள்ள சூழலில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஸ்யாவின் எஞ்சியுள்ள வர்த்தக சகாக்களான சீனா இந்தியாவை இலக்குவைத்து அமெரிக்கா தடைகளை விதிக்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது ரஸ்யாவை மேலும் நெருடிக்குள்ளாக்கும் ஆனால் சர்வதேச ரீதியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
தடைகள் விதிக்கப்படும் ஆனால் அவர்கள் தடைகளை தவிர்ப்பதில் வல்லவர்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அணுவாயுதநீர்மூழ்கிகள் எங்கிருக்கவேண்டுமோ அங்குள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.