News

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்! சர்வதேச பத்திரிக்கையொன்றின் 5 ஊடகவியலாளர்கள் பலி

காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் சர்வதேச ஊடகமொன்றின் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

நேற்றையதினம்(10) அல் ஷிபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு அருகே நடந்த தாக்குதலில் அல் ஜசீரா அரபு நிருபர் அனஸ் அல் ஷெரீப், நிருபர் முகமது ரைக் மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹிர், முகமது நௌபால் மற்றும் மோமின் அலிவா ஆகியோர் உயிரிழந்ததுள்ளனர்.

ஹமாஸ் முகவர்களுக்கு உதவ முயன்றபோது அல் ஷெரீஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

al jazeera journalists killed in gaza

இவர்கள் தவிர, முகமது அல்-கால்தி என்ற உள்ளூர் நிருபர் ஒருவரும் பலியாகியுள்ளார்.இதே தாக்குதலில், 3 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. போர் தொடங்கிய கடந்த 2023 முதல் காசாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் இராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்! சர்வதேச பத்திரிக்கையொன்றின் 5 ஊடகவியலாளர்கள் பலி | Al Jazeera Journalists Israel Killed In Gaza

 

பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக காசா பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புகள் இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top