தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில், ‘நீதியின் ஓலம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணியில் ஆரம்பமாகும் இந்தப் போராட்டம், தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தாயகச் செயலணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.